ஈரோடு கோட்டை: அப்பர்சாமி மடத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், மார்கழி பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. மாலை, ஆறு மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணிக்கு, ஏழு திரைகள் விலக்கி, ஜோதி தரிசனமும் காட்டப்படுகிறது. மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் காலை, ஐந்து மணி முதல் முற்றோதுதல் நிகழ்ச்சி, அதாவது திருவருட்பா பாடல்கள் பாடப்படுகிறது. ஜோதி தரிசன விழா, ஏற்பாடுகளை சங்க தலைவர் முருகேசன் செய்து வருகிறார்.