திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர்கள் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்குகிறது.கார்த்திகை தீபத்தன்றும், தெப்பத்திருவிழா மறுநாளும் இத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி தேரோட்டம் நடக்கும். 15 அடி உயரம், 15 அடி அகலமுள்ள, பழமை வாய்ந்த இத்தேர் பழுதடைந்துள்ளதால், கோயில் நிர்வாகம் புதுப்பிக்க முடிவு செய்தது. உபயதாரர் மூலம் ரூ.3.50 லட்சம் செலவில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி, தெப்பத்திருவிழா தேரோட்டம் முடிந்து துவங்க உள்ளது.பெரிய வைரத் தேர்: கோயில் முன்புள்ள பெரிய வைரத்தேரில், பங்குனி திருவிழாவில் திருக்கல்யாணத்திற்கு மறுநாள் சுவாமி எழுந்தருளி, கிரி வீதியில் தேரோட்டம் நடைபெறும். 22 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட இத்தேரையும் பூம்புகார் நிறுவனம் மூலம் புதுப்பிக்க மதிப்பீடு தயாரித்து ஒப்புதலுக்காக கோயில் நிர்வாகம் அனுப்பியுள்ளது.