திருநெல்வேலி: அச்சன்கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. கேரளா அச்சன்கோயிலில் ஐயப்பன், அரசர் கோலத்தில் அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் ஐயப்ப சீசனில் மார்கழி மாதத்தில் மகோத்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உற்சவ விழா, கடந்த டிச., 16 (மார்கழி 1ம்தேதி) காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிசேகம், ஆபரணங்கள் அணிவித்தல், அன்னதானம், கருப்பன்துள்ளல், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இன்று பம்பை நதியில் ஆராட்டுவிழா நடக்கிறது. நாளை(டிச.,26) மகோத்சவ நிறைவு விழா நடக்கிறது.