உலக அமைதி, குடும்ப ஒற்றுமை வேண்டி 1,008 விளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2013 12:12
கரூர்: பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் 27ம் ஆண்டு விழா முன்னிட்டு 1,008 விளக்கு பூஜை நடந்தது. நிலவளம், நீர்வளம்,சீரானமழை, உலக அமைதி,குடும்ப ஒற்றுமை குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏராளமான பெண்கள் விரதமிருந்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பூஜையில் நீல வஸ்திரம் அணிந்து நித்திய தியானத்தில் இருந்தபடி ஐயப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.