பதிவு செய்த நாள்
02
ஜன
2014
11:01
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில், ஆஞ்சநேயர் பக்த சபைக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ ராமர் கோயில் உள்ளது. இதில் வெங்கடாசலபதி, பத்மாவதி அம்மாள், கருடாழ்வார் சிலையை அமைக்க, பக்த சபையினர் தீர்மானித்தனர். இதற்கான சிலைகளை, திருப்பதியிலிருந்து வடிவமைத்து, நேற்று விருதுநகர் கொண்டு வந்தனர். மதுரை ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரே, சுவாமி சிலைகளை பக்தர்கள் வரவேற்றனர். இதை தொடர்ந்து, ராமர் கோயில் வளாகத்தில், வெங்கடாசலபதி, பத்மாவதி, கருடாழ்வார் சிலைகளுக்கு, சாஸ்திர பூஜைகள் நடத்தப்பட்டது. விருதுநகர் வாழ் மக்கள் நோயின்றி வாழவும், தொழில் சிறக்கவும், கல்வி செல்வம் பெருக, சுவாமியின் அருள் பெற, பக்தர்கள் திரண்டிருந்தனர். மாஜி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.