பதிவு செய்த நாள்
11
ஜன
2014
10:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் 441 வது ஆராதனை விழாவை முன்னிட்டு மூல பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பாவபோதகர், உத்திராதி மடத்தின் குருவான ஸ்ரீ ரகூத்தம தீர்த்த சுவாமிகளின் 441 வது ஆண்டு ஆராதனை விழா நேற்று துவங்கியது. காலை 5.30 மணிக்கு மூலபிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம், 9.30 மணிக்கு ரகூத்தம வித்யாபீட மாணவர்களின் சாஸ்திர அனுஆதம் பாவபோத பாராயணம் நடந்தது. வெள்ளி தேரில் ரகூத்தமர் மூலபிருந்தாவன உலா நடந்தது. 12 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், மங்கல ஆரத்தி நடந்தது. இரவு 7.30 மணிக்கு ஜெயதீர்த்தமேஉண்டியின் இன்னிசை, பண்டிட்களின் உபன்யாசம் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை நிர்மால்ய பூஜை, பண்டிட்களின் பிரசங்கம், குருஜி ஸ்ரீசத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு முத்ராதாரணம் செய்து வைக்கிறார். 2 மணிக்கு மூலராமர்க்கு மகா பூஜை, 3 மணிக்கு பீமசேனஆச்சார்ரிய உபண்யாசம், பிரசன்னா குழுவினரின் இன்னிசை இரவு முழுக்க நடக்கிறது. இதனையடுத்து இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவின்படி பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாசார்ய சிம்மலகி செய்து வருகிறார்.