திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரி வேட்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2014 10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதன் கோயிலில் பாரி வேட்டை திருவிழா நடந்தது. கோயிலில், பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பணசுவாமி, சங்கிலி கருப்பணசுவாமி, அக்னி வீரபத்திர சுவாமி, இருளப்பா சுவாமிகளுக்கு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று வேட்டை சாத்துப்படி செய்து பூஜை நடத்தினர். இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பூச்சப்பரத்தில் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை அங்காள பரமேஸ்வரி சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்றடைந்தார்.