திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2014 10:03
திருவான்மியூர்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனிப்பெருவிழாவின் கடைசி நாளான நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனிப்பெருவிழா துவங்கியது. விழாவின் கடைசி நாளான நேற்று, உற்சவர் சந்திரசேகரர், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. இரவு 7.30 மணிக்கு அம்பாளுடன் , சந்திரசேகரர் , தெப்பத்தில் எழுந்தருளினர், இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.