மயிலாடுதுறை: சென்னை ஆம்னி பஸ்சில் இருந்து ஐம்பொன்சிலைகளை தேர்தல்பறக்கும் படையினர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் சீர்காழி-பைபாஸ் சாலையில் துணை தாசில்தார் விஜயராகவன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணர், காமாட்சி, முருகன், விநாயகர், திருவாச்சி, வீணை கரும்பு போன்றவற்றின் ஐம்பொன்சிலைகைளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.