பதிவு செய்த நாள்
29
மார்
2014
10:03
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 48 லட்சம் ரூபாய், உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி கடந்த 26 தேதி துவங்கி 27ம் தேதி இரவு வரை நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை வேதா முன்னிலை வகித்தனர். உண்டியலில் 47 லட்சத்து 85 ஆயிரத்து 301 ரூபாய் ரொக்கமும், 427 கிராம் தங்க நகையும், 568 கிராம் வெள்ளி நகையையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் அறங்காவலர் தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.