கழுகுமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2014 12:04
கோவில்பட்டி,: கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் 6 மணிக்கு மேல் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும்.