தஞ்சை: தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி மூலவர் முத்துமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை தரிசித்து சென்றனர்.