புதுச்சேரி: அக்ஷய சீரடி சாய்பாபா கோயிலின் 4-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. லாஸ் பேட்டை செவாலியோ சிவாஜி நகரிலுள்ள அக்ஷய சீரடி சாய்பாபா கோயிலின் 4-வது ஆணடு விழாவை முன்னிட்டு சம்வஸ்திரா அபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், அக்ஷயசாய் மூல மந்திர ஹோமமும், காலை 9:00 மணிக்கு சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வந்து சாய்பாபாவை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அக்ஷய சீரடி சாய்பாபா டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.