திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணைய்நல்லூர் மலட்டாறின் முகப்பில் அரிச்சந்திரன் சிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. பிரேதத்தை மயாணத்திற்கு எடுத்துச்செல்வோர் இச்சிலைக்கு காணிக்கை செலுத்துவர். கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்த போது மர்ம நபர்கள் சிலையை திருடிச்சென்றனர். இதற்கிடையே ஊரில் அடிக்கடி இறப்பு நேரிட்டதால் மக்கள் கவலையடைந்தனர். இதையடுத்து அருளார் சுந்தரர் அருட்சபை சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் அரிச்சந்திரனுக்கு சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.நேற்று காலை 9:45 மணிக்கு சிலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்.கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.