திண்டுக்கல் : தோல் வியாதி தீர்வதற்காக, ஆலயத்துக்கு, துடைப்பத்தை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.திண்டுக்கல், தோமையார்புரம், புனித தோமையார் ஆலயத்தில், விழா நடந்து வருகிறது. மின்னலங்கார தேர்களுடன் கூடிய புனிதர்களின் ரத ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, குணமளிக்கும் வேண்டுதல் திருப்பலி நடந்தது. ஆடம்பர கூட்டுத்திருப்பலியை, திண்டுக்கல் மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி நடத்தினார்.தோல் வியாதி தீர, நேர்த்திகடனாக, 2,000க்கும் மேற்பட்டோர், நீண்ட நேரம் காத்திருந்து, ஆலயத்தில் துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தினர். புனித தோமையாரின் சப்ர ஊர்வலம் பின்பு நடந்தது.