பதிவு செய்த நாள்
07
மே
2014
12:05
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நேற்று காலை 8:30 மணிக்கு ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, வைகாசி மாத ஆண்டு பிரம்மோற்சவம், நேற்று காலை 7:30 மேல், 8:30 மணிக்குள்ளான மிதுன லக்னத்தில், சிவாச்சாரியர்களால் கொடியேற்றம் நடந்தது.பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கலச நீர் ஊற்றப்பட்டு தீபராதனைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு பவழக்கால் சப்பரத்தில், சுந்தராம்பிகையுடன், கச்சபேஸ்வரர் சுவாமி நான்கு ராஜவீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 11:45 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். மாலை 6:30 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.