பதிவு செய்த நாள்
13
மே
2014
12:05
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவில், நேற்றிரவு தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், கடந்த ஒரு மாதமாக, கோவில் கிணற்றில் இருந்து தண்ணீர் விட்டு, நிரப்பப்பட்டது. அதன்பின், தெப்பத்தேர் உற்சவ ஏற்பாடுகள் துவங்கின. மலர் களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், கருணாம்பிகை அம்மன் சமேதராய், அவிநாசியப்பர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். குளத்தில் நான்குபுறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள், பூக்களை தூவி, வழிபட்டனர். நாதஸ்வர கலைஞர்கள் மேகராக குறிஞ்சி, லாலி, ஓடம், அமிர்தவர்ஷினி, தோடி ஆகிய ராகங்களை இசைக்க, ஐந்து சுற்று வலம் வந்த அவிநாசியப்பர், மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினார். தேவர் திருமண மண்டப அறக்கட்டளை மற்றும் தேவர் சமூகத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, நடராஜர் தரிசன காட்சியும், நாளை, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.