பதிவு செய்த நாள்
13
மே
2014
12:05
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருவிழா, ஜூன் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற <உள்ளது. 11ம் தேதி அன்று விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டமும், 12ம் தேதி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டமும் நடைபெறும். இதன் துவக்கமாக, இரு தேர்களும், நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணி நடந்தது. நேற்று காலை, தேரோட்டத்துக்கு தயார்படுத்தும் வகையில், அலங்காரம் செய்விக்க, விநாயகர் பூஜை நடத்தி, மங்கள இசையுடன், சிறப்பு பூஜை செய்து, கால்கோள் விழா நடந்தது.