பதிவு செய்த நாள்
14
மே
2014
01:05
உடுமலை : உடுமலை புவன கணபதி கோவிலில், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிலை, ஜூன் 5ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. உடுமலை, எலையமுத்துார் ரோட்டில் உள்ள புவன கணபதி கோவிலில், விநாயகர், அம்பிகை, சிவன், நவக்கிரகங்கள், ரேணுகாம்பாள், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை அம்மன் உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.புவன கணபதி கோவில் கமிட்டித் தலைவர் ராஜாமணி கூறியதாவது: பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க, கோவிலில் ஜூன் 5ல், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான விழா ஜூன் 3ம் தேதி, மாலை 6.00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 4ம் தேதி காலை 9.15 முதல் யாகசாலை பூஜை, கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமமும், மாலை 5.00 மணிக்கு, பிம்பபிரதிஷ்டையும் நடக்கிறது. ஜூன் 5ம் தேதி காலை 5.15 முதல் 6.30 மணிக்குள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. காலை 6.30 முதல் 8.00 மணிக்குள், காயத்ரி ேஹாமம், நாடி சந்தானம், திருமஞ்சன அபிேஷகங்கள் நடக்கின்றன. விழாவின் போது, தீர்த்தம் கொண்டு வருவோர் மற்றும் முளைப்பாலிகை ஏற்பாடு செய்பவர்கள் தங்கள் பெயரை கோவில் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.