செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று மாலை அருணாசலேஸ்வரர், அபிதகுஜாம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.