சித்திரைகட்டி எல்லம்மாள் கோவிலில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2014 12:06
ஆர்.கே.பேட்டை : சித்திரைகட்டி எல்லம்மாள் கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில், சித்திரைகட்டி எல்லம்மாள் கோவில் தீமிதி திருவிழா, கடந்த வியாழக்கிழமை துவங்கியது. நான்கு நாள் திருவிழாவில், தினசரி அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம், பக்தர்கள் அம்மனை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருள செய்தனர். அம்மன் எழுந்தருளிய வாகனத்தை பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி ஊர்வலமாக கொண்டு வந்தனர். நேற்று மாலை, கிராம எல்லையில் உள்ள அம்மன் கோவிலில் இருந்து, காப்பு கட்டிய பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். எல்லம்மாள் கோவில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு வாணவேடிக்கையும், தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடந்தன.