Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதிலமடைந்து வரும் சஞ்சீவிராயர் ... காரைக்காலில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்! காரைக்காலில் விநாயகர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஹா... ஆடி...!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
10:07

தேடி விதை: ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. ’ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்’ என்பதை முன்னோர் கணித்து ’ஆடிப்பட்டம் தேடி விதை’ என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ’ஆடிப்பட்டம் எப்போ வரும்?’ என காத்திருப்பர். ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும். ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு. சோழவந்தான் தென்கரை விவசாயி கர்ணன், ”ஆடி மாதம் நெருங்கியதும் வயலில் உழவடை பணியை துவக்குவோம். ஆடியில் நெல் விதைத்ததும் மழை வேண்டி வர்ண பகவானுக்கு பூஜை செய்வோம். ஓரிரு நாளில் மழை பொழிந்து விடும். விதைகள் முளைக்க துவங்கும். மூன்று மாதத்தில் நெற்கதிர்களில் பால் பிடித்து அறுவடைக்கு தயாராகும். இந்த வழக்கம் இயற்கையுடன் இணைந்தது. ஏனென்றால் இயற்கை எனும் தாய்க்கு தெரியும் மகனை (பயிர்கள்) எப்படி அரவணைப்பது என!,” என்றார்.

தாலி பெருக்குதல் வைபவம்:
புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இரு புறமும் லட்சுமி காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பது தாலி பெருக்குதல் வைபவம். முதன் முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும் போது மங்களகரமான தாலியுடன், லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.

ஆர்ப்பரிக்கும் ஆடிக்காற்று:
ஆடி மாதத்தில் தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணத்தை துவங்குகிறது. இந்த மாதத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு அதிகமாகவும் இருக்கும். இதனால் காற்றின் வேகமும் அதிகரிக்கும். ஆடிக் காற்று சூறாவளி போல் சுழன்று வீசுவதால், ’ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என்ற பழமொழி, மக்களை நினைவுபடுத்த வைக்கிறது. மழையும் ஆடி மாதத்தில் மக்கள் மனங்களை குளிர்விக்க துவங்கி விடும். காற்று, மழை, விவசாயம், தெய்வீகம் என அனைத்திற்கும் ஏற்புடைய இந்த ஆடி ’சக்தி’ மாதம் எனவும் போற்றப்படுகிறது.

ஆடியில் கூடினால்...:
ஆடி மாதம் தமிழர் பண்பாட்டோடு இணைந்தது. ஆடிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் புதுமணத் தம்பதியை, பெண் வீட்டார் அழைப்பர். புத்தாடைகள், சீர் வரிசைகள் வழங்குவர். இட்லி, பனியாரம், தோசை, விடக்கோழி, ஆட்டுக்கறி விருந்து என பலகாரங்கள் செய்து தம்பதியை அசத்துவர்.ஆடி மாதம் முழுவதும் தனது பெற்றோர் வீட்டில், புதுப்பெண் தங்கியிருப்பார். அதாவது ஆடியில் புதுமணத் தம்பதியர் ’கூடி’னால், சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில், குழந்தைக்கு உடல் ரீதியாக பிரச்னை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, ஆடியில் தம்பதியை பிரித்துவிடுவர். கடைசி ஆடி (ஆடி இறுதிநாள்) மணமகன் வீட்டார், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். அன்றும் கறிவிருந்து நடக்கும். இந்த நடைமுறை தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ள ஆடி ஜோடி: இரு மனங்களை இணைக்கும் திருமணம் சார்ந்த விசேஷங்களுக்கு குறைவேயில்லை. மறு வீடு, தலை தீபாவளி, தலை பொங்கல் என்று தழைவாழை இலையில் தடபுடல் விருந்து வரிசை கட்டி காத்திருக்கும். மனைவி சொல்லே மந்திரம் என, அவள் அன்பில் ஆடி போன கணவன், மனைவியுடன் தலை ஆடிக்கு மாமியார் வீட்டில் தலை காட்டும் நாள், வாழ்வில் மீண்டும் வராதா என ஏங்க வைக்கும் திருநாள். இந்த அற்புத தலை ஆடியை ஜோடி சேர்ந்து கொண்டாடும் மதுரை ரவிக்குமார், உஷாராணி தம்பதிகள் கூறியதாவது: என்னை விட என் மனைவி தான் அதிக ஆர்வமாக இருக்கிறார். ஏனென்றால் அவள் அம்மா, அப்பாவை பார்க்க போகும் சந்தோஷம். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க காத்திருக்கும் குழந்தையை போலவே மாறிவிட்டாள். என் சொந்த ஊர் சோழவந்தான், வேலை காரணமாக மதுரையில் குடியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் மாமா, அத்தை புத்தாடை வாங்கி வைத்திருந்தாலும், என் மனைவிக்கு என் சார்பில் நானும் ஒரு பரிசு வாங்கியுள்ளேன். அதை, சஸ்பென்சாக அவளிடம் கொடுக்கவுள்ளேன். இது போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் முன்னோர்கள் வகுத்தது, அதை இளம் தலைமுறையினர் மதித்து பின்பற்ற வேண்டும், என்றனர்.

ஆடிப் பலகாரம்: கிராமங்களில் ஆடிப்பண்டிகையன்று இட்லி, தோசை, பணியாரம் சமைப்பர். ஆடிக்கு முதல்நாள் பக்கத்து வீட்டுப் பெண்கள், ’என்ன மதினி’ என அவரவர் உறவுமுறைகளைச் சொல்லி, ’ஆடிப்பலகார’த்துக்கு, எப்ப மாவாட்டப் (மாவு அரைக்க) போறீங்க...,’என்பர். வசதியான வீடுகளுக்கு முன் பெரிய ஆட்டுக்கல் உரல் இருக்கும். மாலையில் உரலில் அரிசி, உளுந்தை தனித்தனியாக இடுவர். கூட்டுக்குடும்பத்து பெண்களில் ஒருவர் ஆட்டுக்கல்லை பிடித்து மாவு அரைப்பார். அருகிலுள்ள பெண் அரைபடாத அரிசி, உளுந்தை உரல் குழிக்குள் தள்ளிவிடுவார். இது நல்ல உடற்பயிற்சியாக இருந்தது. கிராமங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி, கோயில் திருவிழாக்கள், தைப்பொங்கல், தீபாவளியின் போதுதான் இட்லி, தோசை (பலகாரங்கள்) சமைப்பர். இன்று வீடுகள் தோறும் மிக்சி, கிரைண்டர் ஆக்கிரமித்துவிட்டதால் ஆண்டிற்கு சிலமுறை சாப்பிட்ட ’பலகார’ங்கள், தினசரி உணவாகிவிட்டன. ஆட்டுக்கல் உரல்கள் நினைவுச் சின்னங்களாகிவிட்டன. ஆனால், ’பலகாரம்’ என்ற சொல் நீங்காமல், மனதில் இடம் பெற்றுள்ளது.

தள்ளுபடி தரும் ஆடி:
ஆடி... இந்த மாதத்தில் புது மணப்பெண்ணுக்கு தாலி பெருக்கி கட்டுவது, விவசாய பணிக்கு அடித்தளமிடுவது என ’ஆடி ஸ்பெஷல்’ பட்டியலில் இப்போது தவிர்க்க முடியாத சொல் தள்ளுபடி. ’மினி தீபாவளியாக’ கருதப்படும் ஆடி மாதத்தில் துணிக்கடை முதல் நகைக்கடை வரை தள்ளுபடிகளை வாரி வழங்கி, ஆடியை ஆடிப்பாடி கொண்டாட செய்கின்றன. தீபாவளிக்கு முன்னோட்டமாக ஆடி வருவதால், இந்த மாதத்திலேயே அனைத்தையும் 10 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கி வைப்பவர்களும் உண்டு. தீபாவளிக்காக புதுப்புது டிசைன்கள், பொருட்களை அறிமுகப்படுத்திய காலம்மாறி, ஆடிக்காகவே ஸ்பெஷலாக டிஸைன்கள், பொருட்கள், துணிகளை போட்டி போட்டு அறிமுகப்படுத்துவது இப்போது அதிகரித்துவிட்டது. இதனாலேயே பழைய டிஸைன்கள், பொருட்களை தள்ளுபடி விலைக்கு விற்க ’ஆடிக்கழிவு’ என அறிமுகப்படுத்திய சொல் காலாவதியாகி விட்டது. நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தேடி தேடி புதுப்புது டிசைன்களை அறிமுகப்படுத்தி இப்போதே திக்குமுக்காட செய்துவிட்டன. இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என வீட்டு உபயோகபொருட்களை விற்பவர்களும் போட்டி போட்டுக் கொண்டு, ’வட்டியே வேணாம். பொருளை எடுத்துட்டு போங்க. தவணை முறையில் கட்டுங்க’ என அள்ளிக் கொடுத்து வருகின்றனர். கேட்ட பொருட்களை எதிர்பார்க்காத குறைந்த விலைக்கு தந்து ஆனந்த கொண்டாட்டத்தை தரும் கடைகளின் ஆடித்தள்ளுபடி இப்போ மக்களுக்கு அத்துப்பிடி!

ஆடியும் பெண்களும்:
ஆடியை கொண்டாடுவது குறித்து, மனந்திறக்கும் மதுரை குடும்பத்தலைவிகள்...

குலதெய்வ வழிபாடு அவசியம்:
கே. லதா: ஆடியில் விசேஷமே குலதெய்வ வழிபாடு தான். திருச்சி லால்குடி அருகிலுள்ள மதுரைவீரன் தான் எங்கள் குலதெய்வம். பங்காளிகள், உறவினர்கள் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவோம். இதற்காகவே ஆடிமாதத்தில் புத்தாடைகள் அணிந்து குலதெய்வத்தை வழிபடுவோம். கிடாவெட்டி விருந்து படைப்போம். ஒருநாள் இரவு தங்கி, மறுநாள் வீடு திரும்புவோம்.

ஆடிக்கு தனிபட்ஜெட்: பி.சரஸ்வதி: ஆடி மாதத்தில் அம்மாவும், நானும் ஆடைகள் வாங்குவதை விரும்புவோம். என்னுடைய விருப்பம் காட்டன் சேலைகள் தான். குறைந்தவிலையில் நிறைய டிசைன்கள் இருப்பதால் நான்கு ’செட்’ எடுத்து விடுவேன். எந்த சீசனுக்கும் காட்டன் சேலை பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஆடியில் ஆடை வாங்குவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கி விடுவோம்.

மகளுக்கு தங்க வளையல்: டி.மகாலட்சுமி: மகளுக்கு இது தலை ஆடி. மகளும், மருமகனும் சென்னையில் உள்ளனர். மதுரையில் இருக்கும் சம்பந்தி வீட்டுக்குச் சென்று, மகள், மாப்பிள்ளையை ஆடிக்கு வீட்டுக்கு அழைப்பதற்காக சென்று வந்தோம். தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்குடன் ஆடை வாங்குவதற்கு ரூபாய் கொடுத்துவிட்டோம். ஆடி முதல் தேதியன்று வீட்டுக்கு வரவேண்டும். இருவரும் வேலைக்குச் செல்வதால் சனி, ஞாயிறில் வர உள்ளனர். இரண்டு நாட்கள் கறிவிருந்து பரிமாறுவோம். ஆடி சீதனமாக தங்க வளையலும், பாத்திரங்களில் இனிப்பு வகைகளை கொடுத்தனுப்புவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ம் ... மேலும்
 
temple news
கழுகுமலை; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மன்னார்குடி; மன்னார்குடி வெண்ணைத்தாழி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவழும் கண்ணனாக வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar