காரைக்காலில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2014 10:07
காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, வரும் ஆக.29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவின்போது, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்து, கடலில் விஜர்சனம் செய்வர். விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேப்பர் மற்றும் கிழங்கு மாவு கூழ் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. சிலைகள் 3 அடி முதல் 12 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது. இச் சிலைகள் நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.