பதிவு செய்த நாள்
04
ஆக
2014
01:08
ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை ஒட்டி, சென்னையின் பல்வேறு அம்மன் கோவில்களில், திருமாங்கல்யம் சார்த்துதல், கூழ்வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடந்தன.கொடுங்கையூர், எழில் நகர், பவானி அம்மன் கோவிலில், பவானி அம்மனுக்கு, தங்க திருமாங்கல்யம் சார்த்துதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, சிவசக்தி அம்மன் கோவிலிலில் இருந்து, ஐநுாறுக்கும் மேற்பட்ட பெண்கள், தலையில் கலசநீரை சுமந்து, ஊர்வலமாக பவானி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பவானி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.சின்னமாத்துார், பாலசுப்பிரமணியன் நகர், பவானி அம்மன் கோவிலில், நேற்று மதியம், அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், அன்ன படையல் போடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை கள் நடந்தன.