தூத்துக்குடி: தூத்துக்குடி பனி மய மாதா சர்ச்சில், இன்று தேர் பவனி நடக்கவுள்ளது. தூத்துக்குடியில் 430 ஆண்டுகள் பழமையான பனி மய மாதா சர்ச் உள்ளது. இந்த சர்ச்சில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆக., 5 ம் தேதி வரை திருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா ஜூலை 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஜெபமாலை, சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்து வருகிறது. நேற்று இரவு 7 மணிக்கு, ஆராதனை நடந்தது. இரவு 9க்கு நற்கருணை பவனி நடந்தது. இன்று காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி, பகல் 12 க்கு சிறப்பு நன்றி திருப்பலி, மதுரை பிஷப்- பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் நடக்கிறது. மாலை 5 க்கு ஆடம்பர திருப்பலி, இரவு 7.30 மணிக்கு நகர வீதிகளில் தேர் பவனி நடக்கிறது.