விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் 163ம் ஆண்டு பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2014 12:08
புதுச்சேரி: நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 163ம் ஆண்டு பெருவிழாவையொட்டி, வரும் 15ம் தேதி தேர்பவனி நடக்கிறது. நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 163ம் ஆண்டு பெருவிழா நேற்று துவங்கியது. காலை 6.௦௦ மணிக்கு திருப்பலி நிறைவேறியவுடன், புதுச்சேரி-கடலுார் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் அடிகள் கொடியேற்றி வைத்தார். விழாவையொட்டி, வரும் 15ம் தேதி வரை தினந்தோறும் காலை 5.00 மணிக்கும், மாலை 6.00 மணிக்கும் திருப்பலி நடக்கிறது. 15ம் தேதி மாலை 5.30 மணிக்கு, சிறப்பு தேர்பவனி நடக்கிறது.