திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மந்தக்கரை வீதியில் உள்ள மதுரைவீரன் கோவிலில் ஆண்டு பெருவிழா நடந்தது. திருக்கோவிலூர், மந்தக்கரை வீதியில் உள்ள மதுரைவீரன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, கள்வரை கருவறுத்து வெள்ளையம்மாளை சிறையெடுக்கும் வைபவம் நடந்தது. நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட மதுரைவீரன், வாண வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. இன்று இரவு 8:00 மணிக்கு கும்பபாளையம் கொட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மந்தக்கரை, தெப்பக்குள தெரு மக்கள் மற்றும் பக்தர்கள் செய்தனர்.