பதிவு செய்த நாள்
09
ஆக
2014
12:08
பெரியகுளம்: ஆடி வெள்ளியை முன்னிட்டு தேனி மாவட்ட கோயில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில், மூன்று நாட்கள் பவித்ர உற்சவ நிகழ்ச்சி நடந்தது. யாகசாலை பூஜையும் துவங்கியது. பெருமாளுக்கு பவித்ர மாலையிட்டும், மகாசாந்தி ஹோமம் நடத்தியும், திருப்பாவடை சாற்றியும், உற்சவமூர்த்தி ஊஞ்சல் சேவையும், திருப்பதியில் நடப்பது போல் பவித்ரஉற்சவம் நடந்தது. பவித்ர உற்சவம் என்பது ‘மக்கள் நலன் வேண்டி, தோஷங்கள் நீங்கி, நன்மை நடப்பதற்கான பூஜையாகும். அர்ச்சகர் கண்ணன் மற்றும் அர்ச்சகர்கள் தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்தனர்.
*ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் பத்மாவதி மகாலட்சுமிக்கு 16 வகையான சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபா
ராதனைகள் நடந்தது. இதில் சுமங்கலி பெண்களுக்கும், திருமணத்தடை உள்ளவர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதியின் அருளாசிபெற்றனர்.
*வரலட்சுமி பூஜை: கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. வரலட்சுமி விரதத்திற்கான சிறப்பு அபிஷேகமும் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி அம்மனுக்கு சாகம்பரிய அலங்காரம் ( காய்கனி) செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு சொர்ணாபிஷேகம் நடந்தது. மகளிர் குழுவினர் பக்தி பஜனைப்பாடல்கள் பாடினர். பெண்களுக்கு வளையல், தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.
* உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து பூஜையில் கலந்து கொண்டு மாங்கல்ய பூஜை செய்து தாலி மாற்றிக் கொண்டனர். சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் நாகம்மாள் கோயிலிலும் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டனர். சிறப்பு அன்னதானம் நடந்தது.
தொடர்புடைய கோயில்கள் :