கடலூர்: கடலூர் வன்னியர்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. கடலூர், வன்னியர்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 31ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 1ம் தேதி சாகை வார்த்தல், கும்பம் கொட்டுதல் நடந்தது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 6ம் தேதி சிவபெருமான், அம்மன் பரிவேட்டை நடந்தது. நேற்று காலை கெடிலம் நதியில் இருந்து ஜலம் கொண்டு வந்து அபிஷேக ஆராதனை, மதியம் செடல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலையில் மேள தாளம் முழுங்க திருத்தேர் வீதியுலா நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இன்று (9ம் தேதி) மாலை 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.