Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமை மாறாமல் நீராழி மண்டபம்: ... தமிழக கோவில்களில் சாமி சிலைகள் திருட்டு: அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு! தமிழக கோவில்களில் சாமி சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ’ஷூட்டிங்’; தீட்சிதர்கள் மீது பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2014
12:09

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஷாம்பு நிறுவனம் சார்பில் நடந்த விளம்பர படப்பிடிப்பால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். உலக அளவில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு, தமிழக அரசின் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள், சுப்ரிம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் மீண்டும் பொது தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் வந்தது. கோவிலில் புகைப்படம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தீட்சிதர்களே, கோவில் சன்னதியில் சினிமா மற்றும் விளம்பர படம் எடுக்க அனுமதித்து வருவது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி கோவில் பிரகாரம் மற்றும் நடராஜர் சன்னதியில் ’மங்கள் தீப்’ அகர்பத்தி கம்பெனிக்கு மும்பை மாடல் அழகிகளை வைத்து விளம்பர படம் எடுக்கப்பட்டது.அதில் ஒரு காட்சி, நடராஜர் சன்னதியான கனகசபை எனப்படும் சிற்சபையில் ஒரு பெண் அகர்பத்தியை ஏற்றி வைத்து நடராஜரை வழிபடுவது போல் காட்சி எடுக்கப்பட்டது. அதையடுத்து, நேற்று காலை 8:00 மணி முதல் ’பிரைமரி கலர்’ நிறுவனம் சார்பில் பிரபல ’சிக் ஷாம்பு’ நிறுவனத்திற்காக மேற்கு ராஜ கோபுரம் வாயில் அருகே உள்ள முருகன் சன்னதி அருகில் கூடாரம் அமைத்து, ஏராளமான கேமிராக்கள் பொருத்தி படப்பிடிப்பு நடத்தப்பட்டது.அதில், மும்பை மாடலிங் பெண், படிக்கட்டில் தலை முடியை பறக்கவிட்டவாறு அண்ணப்பட்சி விளக்கு ஏற்றுவது, கோவில் பிரகாரதத்தில் நடந்து வருவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டது.

பிற்பகலில் கோவில் கதவை மூடிவிட்டு, சிற்சபையில் மாடல் அழகி, நடராஜரை தரிசனம் செய்வது, கும்பலாக சன்னதியில் நடந்து வருவது போன்ற காட்சிகள் படமாக்கினர்.நடராஜர் சன்னதியில் மதியம் படப்பிடிப்பு நடந்த போது கோவில் சன்னதி பெரிய கதவு (நடை) மூடிவிட்டனர். அப்போது கோவில் பிரகாரத்தில் இருந்தவர்களை, தீட்சிதர்கள் வெளியேற்றினர். இந்த படப்பிடிப்பிற்காக, ராஜ் சினி சர்வீஸ், சென்னை 93 என்ற நிறுவனத்தின் டி.என் 31 வி 8661 என்ற பதிவெண் கொண்ட வேன் உட்பட 15க்கும் மேற்பட்ட லாரிகள், கார்கள், டாடா ஏஸ் வாகனங்கள் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நிறுத்தப்பட்டிருந்தன.

படப்பிடிப்பு குழுவினர் ஆயிரங்கால் மண்டபத்தில் காலை டிபன், மதியம் சாப்பாடு சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர். கோவில் திருவிழா காலங்களில் பக்தர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்தால், கோவில் தொன்மை போய்விடும் என கூறி அவர்களை தாக்கி, கேமிராவை பிடுங்கி படங்களை அழிக்கும் செயலில் ஈடுபடும் தீட்சிதர்கள், நடராஜர் சன்னதியில் தொடர்ந்து விளம்பர படங்களுக்கு ஷூட்டிங் நடத்த அனுமதித்து வருவதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar