பதிவு செய்த நாள்
29
செப்
2014
12:09
விருத்தாசலம்: புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, விருத்தாசலம், பெண்ணாடம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி, சத்யாபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, நேற்று முன்தினம் காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கிருஷ்ணர் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி கோலத்தில் அருள்பாலித்தார். மங்கலம்பேட்டை: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம், காலை 9:00 மணிக்கு சுவாதி ஹோமம், 10:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்ணாடம்: வீற்றிருந்த பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 9:00 மணிக்கு கோ பூஜை, 9:30 மூலவருக்கு திருமஞ்சனம், 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு சுவாதி பூஜை, 6:00 மணிக்கு நவராத்திரி சிறப்பு பூஜை, 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.