பதிவு செய்த நாள்
12
நவ
2014
12:11
திருச்சி: காவிரியாற்றின் புனிதம் காக்க, 1,008 கோபூஜை, முசிறியில் நேற்று நடந்தது. காவிரியாறு மாசுபடாமல் பாதுகாக்கவும், சாக்கடை, ரசயான கழிவுகள் கலந்து விஷமாகமால் காக்கவும், பிரம்மபுத்திரா, கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, நேத்ராவதி மற்றும் மேற்கே பாயும் ஆறுகளை காவியாற்றுடன் இணைக்க கோரியும், திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில், 1,008 கோபூஜை, 1,008 குத்து விளக்கு, 1,008 கும்ப பூஜை நடந்தது. கொல்லிமலை அகஸ்தியர் மணிமந்திர புற்றுநோய் ஆராய்ச்சி மைய ஆசிரம ஸ்வாமி கருணாந்தா தலைமையில், பூஜை துவங்கியது. பாரத கிசான் சங்க பொறுப்பாளர் கணேசன்ஜி துவக்கி வைத்தார். இதில், பாரதிய கிசான் சங்க மாநில துணைத்தலைவர் அய்யாகண்ணு, பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாரதிய கிசான் சங்கம், துறவியர் சங்கம், தேசிய நதிகள் இணைப்பு இயக்கம், தொண்டைமான் கால்வாய், ஒகேனக்கல் அய்யாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்பு இயக்கம் செய்திருந்தன.