பதிவு செய்த நாள்
17
நவ
2014
12:11
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில், ராமாயண வரலாறு நிகழ்வுகளை ஆன்மீக பாடல்கள், உரையாடலுடன் விளக்கும், சொற்பொழிவு உ.பி., வாரணாசியைச் சேர்ந்த சுவாமி ராம்கமல் தாஸ் வேதாந்தி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உ.பி., ம.பி., டில்லி, அரியானா மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். நேற்று அவர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கலசத்தில் புனித நீரை எடுத்துக்கொண்டு கோயில் ரதவீதி, திட்டகுடி வழியாக ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் தனியார் லாட்ஜ்களில் முன்பதிவு செய்து தங்கியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சீதாராம் தாஸ் பாபா, பா.ஜ.., தேசிய பொது குழு உறுப்பினர் முரளீதரன், ராமாயண கதா ஒருங்கிணைப்பாளர் முருகன், கோசுவாமி மடம் மேலாளர் ராமசுப்பு செய்துள்ளனர்.