பதிவு செய்த நாள்
03
ஜன
2015
12:01
சிதம்பரம்: சிதம்பரத்தில் பழமை வாய்ந்த சவுந்திரநாயகி உடனுறை அனந்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. பூலோக கயிலாயம் என போற்றப்படும் சிதம்பரத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது அனந்தீஸ்வரன் கோவில். சிதம்பரம் நடராஜர் மற்றும் தில்லைக் காளி கோவில்களுக்கு முற்பட்ட கோவில் என்பது புராண வரலாற்று சிறப்பாகும். பதஞ்சலி முனிவராகிய அனந்தன் (பாம்பு) பூஜித்த திரு த்தலம். ஆதலால் இக்கோவில் ராகு - கேது பிரகார தலமாகும். அனந்தீஸ்வரனை வழிபட்டால் காலசர்ப்ப தோஷம், களத்தி தோஷம், புத்திர தோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலின் அருகில் உள்ள நாசேரி தீர்த்தகுளமும் சிறப்பு வாய்ந்த குளமாகும். சிறப்பு பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக திருப்பணி நடந்து வந்த நிலையில், வரும் 8ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பா பிஷேகம் நடைபெற உள்ளது. விழா, இன்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 4ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜையும், மாலை வாஸ்து சாந்தி நடக்கிறது. தொடர்ந்து 5ம் தேதி மாலை 7:00 மணிக்கு முதல் யாக சாலை பூஜை துவங்குகிறது. 6ம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 3ம் காலை யாக சாலை பூஜையும் நடக்கிறது. 7ம் தேதி காலை 4ம் கால யாக சாலை பூஜையும், மாலை 5ம் கால யாக சாலை பூஜையும் தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. கும்பாபி ஷேக தினமான 8ம் தேதி காலை 5:30 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜையும், 8:00 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனையும், 9:00 மணிக்கு திரு க்குடங்கள் புறப்பாடாகி 9:20 மணிக்கு ராஜகோபுர விமானம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9:30 மணிக்கு அனந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.