திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் மூலம், 3.22 கோடி ரூபாய் வசூலானது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி, ஒரே நாளில் வந்ததால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, திருமலைக்கு, ஏராளமான பக்தர்கள் வந்தனர். வைகுண்ட ஏகாதசி அன்று, 75 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததால், உண்டியல் வருமானமும் சற்று அதிகமாக வசூலானது. காணிக்கையை கணக்கிட்டதில், 3.22 கோடி ரூபாய் இருந்தது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.