பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பாரதீய வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் உள்ள எல்லாமே பாபா எனும் சாய்ராம் கோவிலில், ஐந்தாவது ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு அலங்காரம், ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவை நாக சாயி மந்திர் பாலகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் குழுவின், ஷீரடி சாய் நாம சங்கீர்த்தன ப்ரவச்சன் சிறப்பு சொற்பொழிவு மற்றும் பஜனை நடைபெற்றது. விழாவில், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், சாய் பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.