பதிவு செய்த நாள்
19
ஜன
2015
12:01
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நேற்று பிரதோஷம் நடந்தது. இதையொட்டி, காலை 5:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், 7:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகமும், 11:00 மணிக்கு, சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, சொக்கநாதருக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரமும், 4:30 மணிக்கு, சந்தனக் காப்பும், இரவு 7:00 மணிக்கு, தங்கத்தேர் புறப்பாடும், இரவு 9:00 மணிக்கு, அஷ்டஜாம பூஜையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.