கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தை அமாவாசை தினத்தில் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி பின்புறம் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்திவேண்டி தை அமாவாசை தினமான நேற்று முன்தினம் மாலை மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. பத்ரகாளியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செ#தனர். கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கு மகா தீபாராதனையும் நடந்தது. யாகத்தில் 300க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.