திருப்புத்தூர்:திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாமி அம்மன்,யோக பைரவர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 17ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. கடந்த 1992ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின் 19 ஆண்டு கழித்து தற்போது மீண்டும் திருப்பணி நடந்துள்ளது. ஜூன் 20 ம் தேதியன்று காலை 9.58 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 17ம் தேதி குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் பூஜைகள் துவங்கின.பின்னர் வாஸ்துசாந்தி, தொடர்ந்து அங்குரார்ப்பணம் நடந்தது. இரவில் சிவாச்சாரியர்களால் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டது.தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜை, பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையில் நடந்தது. ஜூன் 18ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை,மாலை 3 ம்கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஏற்பாட்டினை குன்றக்குடி ஆதீனத்தார் செய்து வருகின்றனர்.