Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்க வடிவில் நவகிரகங்கள், ரிஷிகள்! எந்த நாள்... உகந்த நாள்? எந்த நாள்... உகந்த நாள்?
முதல் பக்கம் » துளிகள்
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் - என்பது ஏன் தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
04:01

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும். ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி ..

ஸ்ரீகிருஷ்ணனிடம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும். அவை என்னென்ன? சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருக்கும். பக்தியுடன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் ஆபரணங்களாகத் தெரியும். எதிரிகளுக்கு இதெல்லாம் ஆயுதங்களாகத் தெரியும். சக்கரம், வில், வாள், கதை இதெல்லாம் ஆயுதங்கள் என்று சொன்னால் சரி ஒப்புக் கொள்ளலாம். சங்கு இருக்கிறதே அது எப்படி ஆயுதமாகும்? இப்படித்தான் துரியோதனன் நினைத்தான் ஏமாந்து போனான்.. கண்ணபிரானுடைய உதவி வேண்டும் என்பதற்காக அர்ஜுனனும் துவாரகைக்குப் போனான். துரியோதனனும் துவாரகைக்குப் போனான். அவர்களிடம், உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார். அவர்கள் இருவரும் தனித்தனியாக, வர இருக்கும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொல்கிறார்? தருமனுக்கு உதவி செய்வதாக முன்பே நான் வாக்குக் கொடுத்து விட்டேன் என்கிறார். துரியோதனன் பார்க்கிறான். சரி அப்படியானால் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து போர் செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டான். ஸ்ரீகிருஷ்ணர் யோசித்தார். சரி என்று ஒப்புக் கொண்டார். இதை கேட்டதும் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் என்ன கேட்கிறான் தெரியுமா? நீங்கள் எனக்கு சாரதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு சரி என்று மகிழ்ச்சியுடன் ஸ்ரீகிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். ஏனென்றால், தேரை ஓட்டும் சாரதிக்குத்தான் யஜமானனுடைய வெற்றியை அறிவிப்பதற்காக அடிக்கடி சங்கு ஊதும் உரிமை உண்டு. ஸ்ரீகிருஷ்ணனுடைய பாஞ்சஜன்யம் என்ற சங்குக்கு எவ்வளவு பலம் உண்டு என்ற விஷயம் துரியோதனனுக்கு முதலில் தெரியவில்லை. மகாபாரதப் போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அவன் புரிந்து கொண்டான். போர் நடக்கும் சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணன் சங்கு ஊதிய போதெல்லாம் ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள் என்பதை துரியோதனன் நேரில் பார்த்தான். அதன் பிறகு தான் அவன் யோசித்தான். ஸ்ரீகிருஷ்ணனுடைய சங்கும் ஓர் ஆயுதமாகி விட்டதே! அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்ற பழமொழி உருவாயிற்று.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar