திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலில் உள்ள ரகசிய அறை விரைவில் திறக்கப்பட உள்ளது. பத்மநாபசாமி கோயிலில் ரகசிய அறைகள் உள்ளதாகவும்,பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. அந்த அறைகளில் விலைமதிக்க முடியாத தங்க நகைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் இருப்பதாக பக்தர்கள் நம்பிவருகின்றர்.இந்நிலையில் அந்த ரகசிய அறையை திறந்து பார்க்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையி்ல் ரகசிய அறைகளை இரண்டு பார்வையாளர்கள் முன்னிலை யில் திறந்து பார்க்க சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்து உத்தரவிட்டது. இதைதொடர்ந்து பார்வையார்கள் அடுத்த வாரம் கோயிலை பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.