ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆண்டாள் கோவிலில், கடந்த 1930ம் ஆண்டு, 47 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக் கொடிமரம் சிதிலமடைந்ததால் அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இக்கொடிமரத்தில், 2 கிலோவில் தங்கத் தகடு பதிக்கப்பட்டு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான விழா, கடந்த 18ம் தேதி மாலை யாகசாலை பூஜை, கும்ப பூஜை, திருவாராதனம் , சாத்து முறை பூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை 10 மணிக்கு கோவிந்தாச்சாரி பட்டர் தலைமையில் கொடிமர பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின், புதிய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.