மாசிமாதம் தீர்த்தங்களில் புனித நீராடுவதன் சிறப்பு பற்றி சம்பந்தர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேவாரத்தில் பாடியுள்ளார். இந்த மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் இருக்கும். சந்திரன் இம்மாத பவுர்ணமியும், மக நட்சத்திரமும் சேரும்நாளில் தன் முழுஆற்றலுடன் பவனி வரும், இந்த நாளே மாசிமகமாக கொண்டாடப் படுகிறது.இந்த நாளில் சூரியனும்,சந்திரனும் ஒருவருக்கொருவர் நேருக்குநேர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வார்கள்.ஜோதிடத்தில் இது முக்கியமான அம்சம். இவ்வாறு பார்வை படும் நாளில் தீர்த்தங்களில் நீராடினால் உடல்நிலை நன்றாக இருக்கும். குறிப்பாக, கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவது சிறப்பானது. அவ்வாறு உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களும் இந்த தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகம். அதிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறைசுபகிரகமான குரு சிம்ம ராசிக்கு வரும் சமயத்தில் நடத்தப்படும் மகாமகம் இன்னும் சிறப்பானது. அடுத்த ஆண்டு மகாமகம் கொண்டாடப்படுகிறது.