சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜியுடன் தங்கியிருந்தார் ஆச்சாரிய வினோபாபவே. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். யாருடன் அவ்வளவாக பேசாமல், ஓய்வு நேரத்தில் பகவத்கீதை படிப்பார். ஒருநாள் காந்தியைச் சந்திக்க வந்த ஆச்சாரிய கிருபளானி, மகாத்மா! தியானம் என்றால் என்ன? என்று கேட்டார். வாசலில் உட்கார்ந்திருக்கிறார் வினோபா. அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்! என்றார் மகாத்மா. வாசலுக்கு வந்த கிருபளானி, வினோபாவை மூன்று முறை அழைத்தும், தன்னை யாரோ அழைக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் அவர் கீதை படித்துக் கொண்டிருந்தார். மீண்டும் காந்தியிடம் சென்று, கூப்பிட்டால், தலை நிமிரக்கூட இல்லை. நான் ஒருத்தன வந்ததையே அவர் கண்டுகொள்ளவில்லை. அவர் பாட்டுக்கு படித்துக்கொண்டே இருக்கிறார்! என்றார் கிருபளானி. காந்திஜி சொன்னார், தியானம் என்றால் என்னவென்று கேட்டாயே அது இதுதான்! மனதில் சிறிதுகூட சஞ்சலம் ஏற்படாமல், ஒட்டுமொத்த கவனத்தையும் ஒரே விஷயத்தில் செலுத்தியிருக்கிறாரே, அதுதான் தியானம்!