மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், அய்ய ப்பன், மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை 25ம் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை 4 மணிக்கு முதல் கால யாக சாலை துவங்கியது. இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. நாளை காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.