பதிவு செய்த நாள்
04
ஏப்
2015
12:04
பழநி: பழநியில் பக்தர்கள், நூறு கிலோவில் காகிதபூ ரதக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திர விழாவையொட்டி, பழநியில் பக்தர்கள், மயில்காவடி, பால்காவடி, சர்க்கரைகாவடி, பூக்காவடி, இளநீர் காவடி, புஷ்பகாவடி, தீர்த்தகாவடிகளுடன் மலைக்கோவிலில் குவிந்தனர். மலைக்கோவில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபத்தில் திராட்சை, மாங்கனி, பூங்கொத்துகளால் தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. வெளிப்பிரகாரத்தில் வண்ணப்பூக்களால் தோகையுடன் கூடிய மயில் வரையபட்டிருந்தது. நாகை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், 100 கிலோ எடையுள்ள காகிதபூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதக்காவடியை சுமந்து, கிரிவீதியில் பாம்பாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என, ஆடி பரவசப்படுத்தினர்.