பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
02:04
பழைய திருப்பாச்சூர்: பழைய திருப்பாச்சூர் செல்லியம்மன் கோவிலில், வரும் 14ம் தேதி, இரண்டாம் ஆண்டு, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாச்சூரில் உள்ளது மகாசக்தி செல்லியம்மன் கோவில். இந்த கோவிலில், இரண்டாமாண்டு தீமிதி திருவிழா, வரும் 10ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடைபெறவுள்ளது.
தேதி நிகழ்ச்சி
ஏப்., 11 அம்மன் வர்ணிப்பு
ஏப்., 12 கூழ்வார்த்தல்
ஏப்., 13 அம்மன் வர்ணிப்பு
ஏப்., 14 காலை சந்தன அலங்காரம், மாலை தீமிதி திருவிழா, இரவு அம்மன் வீதியுலா