பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
02:04
பரபரப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் முற்பகுதியில் அதிக நன்மை காணலாம். 9-ம் இடத்தில் இருக்கும் குரு, 11-ம் இடத்தில் இருக்கும் ராகு தொடர்ந்து நன்மை தருவர். சூரியன் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். அவரோடு இணைந்திருக்கும் புதன் ஏப். 26 வரையும், செவ்வாய் மே 2 வரையும் நன்மை தருவார்கள். சூரியனின் பலத்தால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரவு கூடும்.மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்குவீர்கள். மாதத் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். ஏப். 14, மே 1,2ல் உறவினர்கள் வருகையால் நன்மையும், ஏப். 15,16 மே 12,13ல் பிரச்னையும் வரலாம்.
பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஏப். 26க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். ஆனாலும், ஏப். 28,29ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். எந்த துறையிலும் இறங்க துணிச்சல் பிறக்கும். ஏப். 21,22ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த சிரமங்கள் மே3க்கு பிறகு மறையும். அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெறலாம்.
மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர். ஏப். 26க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டி வரும்.
விவசாயிகள் நல்ல வருமானம் பெறுவர். பழம், பயறு வகைகள் மூலம் அதிக லாபம் உண்டு. சொத்து வாங்க நினைப்பவர்கள் மே 2க்குள் வாங்கவும்.
பெண்கள் மே 10,11ல் புத்தாடை, நகைவாங்குவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
நல்ல நாள்: ஏப். 14, 19, 20, 21, 22, 28, 29, 30, மே 1, 2, 5,6,7,10,11.
கவன நாள்: ஏப். 23, 24 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3, 9. நிறம்: நீலம், செந்துõரம்.
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரரையும், புதன்கிழமை பெருமாளையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவதரிசனம் செய்து பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.