பதிவு செய்த நாள்
05
மே
2015
12:05
உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் ஸ்ரீமனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஸ்ரீமனோன்மணி சமேத பக்த ஜனேஸ்வரர் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சிவப்பெரு மான், அம்மன் ஆகிய பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாரதனைகள் நடந்தது. பின்னர் கோவிலை வலம் வந்த பஞ்சமூ ர்த்தி சுவாமிகள் 3வது ஆண்டாக ஊர் பகுதியில் உற்சவ வலம் வந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரமூர்த்தி, ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., நரசிங்கம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், கோவிந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிமலை, கூட்டுறவு சங்க துணை தலைவர் முத்துக்குமரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.