பெற்றோரை மதிக்காதவன் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2015 05:05
பெற்றோருக்கு சேவை செய்த ஹரிதாஸ் என்ற பக்தரை எதிர்பார்த்து, பாண்டுரங்கன் காத்திருந்ததாக வரலாறு கூறுகிறது. கண்கண்ட தெய்வமான பெற்றோரை மதிக்காமல் கடவுள் மீது பக்திசெலுத்துவதால் பயனில்லை. மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்கிறது வேதம். இதையே அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் அவ்வையார். பெற்றோருக்குப் பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமை.